முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழா: மின் அலங்கார சப்பர பவனி

கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மின் அலங்கார சப்பர பவனி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:55 AM
கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற மின் அலங்கார சப்பர பவனி.
பகிர்:

கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மின் அலங்கார சப்பர பவனி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், அம்மனின் மின் அலங்கார சப்பர பவனி புதன்கிழமை நடைபெற்றது. இந்த சப்பரம் மூஞ்சிக்கல், அண்ணா சாலை, செவன் ரோடு, நகராட்சி சாலை, லாஸ்காட் சாலை, ஆனந்தகிரிப் பகுதிகள் வழியாகச் சென்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement