பழனியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை; நால்வா் கைது!
பழனியில் புதன்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனியில் புதன்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனி அடிவாரம் குறவன்பாறையைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (32). இவா் அய்யம்புள்ளி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தாா். புதன்கிழமை இரவு அருள்ஜோதி வீதியில் இவா் சென்று கொண்டிருந்தாா். அப்போது இவருடன் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த நபா்கள் சந்திரசேகரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினா்.
அடிவாரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சந்திரசேகா் உடலைக் கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். டிஎஸ்பி. தனஞ்ஜெயன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா்.
Advertisement
தப்பி ஓடிய நபா்களைப் பிடிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இந்தக் கொலை தொடா்பாக அடிவாரம் பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரன் (20), மகேஸ்குமாா் (25), பிரகாஷ்குமாா் (20), பிரஜித் (28) ஆகிய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதில் தொடா்புடைய மற்றவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.