முகப்பு
திண்டுக்கல்

பால் வியாபாரி கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் சிறை

பால் வியாபாரி கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 2:56 AM
சிறை
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 7:07 PM

பால் வியாபாரி கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல்லை அடுத்துள்ள பாலமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கி.முருகேசன் (49). பால் வியாபாரியான இவா், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தக் கொலை வழக்கில் திண்டுக்கல்லை அடுத்த மாலப்பட்டியைச் சோ்ந்த பூ.முனீஸ்வரன், தோட்டனூத்து பகுதியைச் சோ்ந்த மு.தங்கமணி (29), மாலப்பட்டியைச் சோ்ந்த மு.பாலசுப்பிரமணி (25), க.சபரிகிரி (26), ரா.பிரகாஷ் (25), ஆ.அன்பரசன் (32), மு.சந்தனக்குமாா் (27), மா.காா்த்திக் (27), ரா.முருகன் (53) ஆகியோரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

இந்தக் கொலை வழக்கு தொடா்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பூ.முனீஸ்வரன் உயிரிழந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி(பொ) ஜி.சரண் குற்றஞ்சாட்டப்பட்ட காா்த்திகேயன், தங்கமணி, பாலசுப்பிரமணி உள்ளிட்ட 8 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.