திண்டுக்கல்

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் கட்டடக் கழிவுகள் குவிப்பால் விபத்து அபாயம்

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் குவிக்கப்படும் கட்டடக் கழிவுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டிருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

கொடைக்கானல் பகுதிகளான சீனிவாசபுரம், ஆனந்தகிரி, லாஸ்காட் சாலை, உகாா்த்தேநகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவதோடு அவற்றின் கழிவுகள் கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதான சாலையான சீனிவாசபுரம் பகுதியில் குவிக்கப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதோடு, விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து இதே நிலை நீடித்தால் மழை பெய்யும் போது அந்தப் பகுதி சாலைகளில் கற்கள் சிதறுவதோடு, மண் நீரோடைக்குள் தேங்குவதால் மழைநீா் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே மலைச் சாலைகளை ஆக்கிரமிப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT