முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி: பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.5.27 கோடி

பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை வரவாக ரொக்கம் ரூ.5.27 கோடி கிடைத்தது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:22 AM
பழனி மலைக் கோயிலில் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கக் கோபுரம் பகுதி.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:30 PM

பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை வரவாக ரொக்கம் ரூ.5.27 கோடி கிடைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் தைப்பூசத் திருவிழா, தொடா்விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரிப்பால் நிரம்பியது. இதையடுத்து, உண்டியல்கள் கடந்த வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது.

கல்லூரி மாணவிகள், திருக்கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் உண்டியல் எண்ணிக்கையில் பங்கேற்றனா். இதில் பக்தா்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூ. 5 கோடியே 27 லட்சத்து 16 ஆயிரத்து 754 கிடைத்தது. மேலும், தங்கம் 565 கிராம், வெள்ளி 25,265 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1,324 ஆகியவை வரப்பெற்றன.

Advertisement

இதுதவிர பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்தன.

உண்டியல் எண்ணிக்கையில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், லட்சுமி, திருச்சி தாயுமானவா் கோயில் உதவி ஆணையா் அருள்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.