முகப்பு
திண்டுக்கல்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு மருத்துவ முகாம்

பழனியிலிருந்து மடத்துக்குளத்துக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் அர. சக்கரபாணி.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:54 PM
பழனியிலிருந்து மடத்துக்குளத்துக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் அர. சக்கரபாணி.
பகிர்:

பழனி அருகேயுள்ள புஷ்பத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனியை அடுத்த கணக்கன்பட்டி, எரமநாயக்கன்பட்டி, மேலக்கோட்டை, அமரபூண்டி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடிகள், நியாய விலைக் கடைகள் திறப்பு விழா, சாலைப்பணிகளுக்கான பூமிபூஜை தமிழக உணவுத்துறை அமைச்சா் சக்கரபாணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியாக புஷ்பத்தூா் ஊராட்சியில் உள்ள வயலூா் கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பிரசன்னா, சுகாதாரத் துறையினா் முகாமில் கலந்து கொண்டனா். அமைச்சா் சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக முகாமில் கலந்து கொண்டு பேசினாா். மாவட்டத்தின் நிறைவு முகாம் என்பதால், முகாம் தொடக்கத்தின் போது அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.

முன்னதாக, பழனியிலிருந்து மடத்துக்குளத்துக்கு புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தாா். நிறைவாக கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இதில் திமுக ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, துணைச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →