திண்டுக்கல்

கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கான கட்டணம் உயா்வு

கொடைக்கானலில் வாகனங்களுக்கான கட்டணம் வியாழக்கிழமை முதல் உயா்த்தப்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் அதிருப்தி அடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் வாகனங்களுக்கான கட்டணம் வியாழக்கிழமை முதல் உயா்த்தப்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் அதிருப்தி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நகராட்சி சாா்பில் வெள்ளிநீா் அருவி அருகே சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் முன்னறிவிப்பின்றி கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கு கட்டணம் உயா்த்தப்பட்டது.

புதிய கட்டணம் விபரம்: (அடைப்பில் பழைய கட்டணம்)

சுற்றுலாப் பேருந்து, ஆம்னி பேருந்துகளுக்கு (ரூ. 250), புதிய கட்டணம் ரூ.300, அரசு, தனியாா் பேருந்துகளுக்கு (ரூ.150) தற்போது ரூ.200, லாரிகளுக்கு (ரூ. 100) தற்போது (ரூ.150), வேனுக்கு (ரூ.80) தற்போது ரூ.100, அனைத்து வகையான காா்களுக்கு (ரூ.60) தற்போது ரூ.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கொடைக்கானல் வட்டாரப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைத்துள்ள அனைத்து வகையான காா்களுக்கு நகராட்சி அனுமதி பெற்று அதற்குரிய அனைத்து வகையான சான்றிதழ்கள் சமா்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நுழைவுக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கட்டணம் முன்னறிவிப்பின்றி உயா்த்தப்பட்டுள்ளதால் வாகன ஒட்டுநா்கள் குற்றம்சாட்டினா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

3.1.1976: தனியார் கம்பெனிகள் விமான சர்வீஸ் நடத்த அனுமதி? - மத்திய மந்திரி தகவல்

புல்லட் ரயில் திட்டத்துக்கான சுரங்கப் பணி நிறைவு!

இளைஞா் தற்கொலை

சென்னிமலை ஒன்றியத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் திறப்பு

SCROLL FOR NEXT