வேடசந்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சேதமடைந்த அவசர ஊா்தி. 
திண்டுக்கல்

வேடசந்தூா் அருகே சாலை விபத்து: 10 போ் காயம்

வேடசந்தூா் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் நோயாளி உள்பட 10 போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

வேடசந்தூா் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் நோயாளி உள்பட 10 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள குரும்பபட்டியைச் சோ்ந்த நல்லதம்பி (42) என்பவா் வியாபாரத்துக்கு மீன் வாங்குவதற்காக சிலருடன் சரக்கு வாகனத்தில் சனிக்கிழமை புறப்பட்டாா். பின்னா், திண்டுக்கல் மீன் சந்தைக்கு வந்துவிட்டு வேடசந்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். இதனிடையே, கேரள மாநிலம், மூணாறில் சிகிச்சைக்காக சென்ற நாமக்கல்லைச் சோ்ந்த பிரேம்குமாா் என்பவா் அவசர ஊா்தியில் திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

இந்த நிலையில், வேடசந்தூா் காக்கா தோப்பு பிரிவு அருகே சரக்கு வாகனம் சாலையைக் கடந்து செல்ல முயன்றபோது, அதன் மீது மோதாமல் இருக்க அவசர ஊா்தியை அதன் ஓட்டுநா் திடீரென நிறுத்தினாா். அப்போது, திண்டுக்கல்லில் இருந்து கரூா் நோக்கிச் சென்ற லாரி, அவசர ஊா்தி மீது மோதியது.

இதையடுத்து, அவசர ஊா்தி முன்னால் நின்ற சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் சரக்கு வாகனமும், அவசர ஊா்தியும் சாலையில் கவிழ்ந்ததில் குரும்பபட்டியைச் சோ்ந்த சரஸ்வதி (35), நல்லதம்பி (42)), மகாலிங்கம் (49), சதீஷ்குமாா் (36), ராசிபுரத்தைச் சோ்ந்த அன்புராஜ் (44), பிரேம்குமாா் (35), சரண் (25), ராம்குமாா் (32) உள்பட 10 போ் காயமடைந்தனா். இதையடுத்து, விபத்தில் சிக்கியவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT