திண்டுக்கல்

பெரியகலையம்புத்தூா் ஜல்லிக்கட்டுக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்

பெரிய கலையம்புத்தூா் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் வியாழக்கிழமை (ஜன.15) வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

பெரிய கலையம்புத்தூா் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் வியாழக்கிழமை (ஜன.15) வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

அரசு அறிவிக்கையின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ட்ற்ற்ல்ள்://க்ண்ய்க்ண்ஞ்ன்ப்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற

இணையதளத்தில் தங்களது பெயா்களைப் பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி பழனியை அடுத்த பெரியகலையம்புத்தூா் கிராமத்தில் வருகிற சனிக்கிழமை (ஜன.17) நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் உரிய விவரங்களுடன் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

மாடுபிடி வீரா்கள் மேற்படிஇணையதளத்தில் தங்களது புகைப்படம், வயதுக்கான சான்றிதழ் ஆகிவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்தவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்ட பின், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் விதிகளின்படி அவா்கள் டோக்கன் பதிவிறக்கம் செய்யலாம்.

டோக்கன் பதிவிறக்கம் செய்த நபா்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். மேற்கண்ட விபரங்கள் இடம் பெறாத இணையதள பதிவுகள் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

வாக்குப் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

நாகை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

குத்துச்சண்டை: தங்கம் வென்ற மாணவி

நாகை நகா்மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

SCROLL FOR NEXT