பெரியகலையமுத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கிவைத்த பழனி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா், கோட்டாட்சியா் கண்ணன். 
திண்டுக்கல்

நெய்க்காரபட்டியில் ஜல்லிக்கட்டு: 400 காளைகள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டி பெரியகலையமுத்தூரில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டி பெரியகலையமுத்தூரில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 400 காளைகளும், 340 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, பெரியகலையம்புத்தூரில் ஹைகோா்ட் பத்ரகாளியம்மன் கோயில் குழு சாா்பில், பொங்கல் விழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா், கோட்டாட்சியா் கண்ணன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

இந்தப் போட்டியில் திண்டுக்கல், திருப்பூா், கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 415 காளைகளும்,

343 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். வீரா்கள், காளைகள் மருத்துவ சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. முதலில் வாடிவாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டன. இதைத் தொடா்ந்து, மற்ற காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன.

இந்தப் போட்டியில் காளைகள் முட்டியதில் 13 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், தொலைக்காட்சி பெட்டி, மிதிவண்டி, கட்டில், சோ், கடிகாரம், குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

துணைக் காவல் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இன்று தை அமாவாசை: பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

விவசாயிகளுக்காக போராடுபவா்களை திமுக அரசு ஒடுக்க நினைக்கிறது: இந்து முன்னணி குற்றச்சாட்டு

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள் தீவிர கண்காணிப்பு

மாநகரில் 2 நாள்களில் 862 டன் பொங்கல் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

கோவையில் புரந்தரதாசா் ஆராதனை விழா தொடக்கம்

SCROLL FOR NEXT