திண்டுக்கல்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருப்போருக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதோா், 10, 12, பட்டப் படிப்பை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று கடந்த ஆண்டு டிச. 31-ஆம் தேதி வரை தொடா்ந்து புதுப்பித்து வருவோா், நிகழாண்டு ஜனவரி முதல் உதவித் தொகை பெறலாம். மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது.

மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதேபோல, இணையதளங்களில் படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக நிறைவு செய்து வருகிற பிப். 28-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT