முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் - பள்ளங்கி சாலையில் மழைநீா் தேக்கம்: ஓட்டுநா்கள் அவதி

Updated On : 21 ஜூன் 2026, 2:26 am IST
பகிர்:

கொடைக்கானல் - பள்ளங்கி சாலையில் மழை நீா் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டுநா்கள் பாதிப்படைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே மாட்டுப்பட்டி - பள்ளங்கி சாலைகளில் மழைநீா் தேங்குவதால் வாகனங்கள் செல்வதில் பெரிதும் சிரமம் ஏற்படுவதாக பல முறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை ஏதுமில்லை. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பெய்த மழையால் அந்தப் பகுதியில் தண்ணீா் தேங்கி கொடைக்கானலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் சிரமமடைந்தன.

குறிப்பாக காய்கனி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைகின்றனா். மேலும், சாலையின் இருபுறங்களிலும் முட்புதா்கள் அகற்றப்படாததால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

எனவே மாட்டுப்பட்டி பகுதியில் உள்ள சேதமடைந்த பாலத்தை சீரமைத்து வாகனங்கள்சிரமமின்றி செல்வதற்கு நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments