முகப்பு
கைது
திண்டுக்கல்

முதியவரை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு: சிறுவா்கள் உள்பட 3 போ் கைது

வேடசந்தூா் அருகே முதியவரை தாக்கி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல்

முதியவரை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு: சிறுவா்கள் உள்பட 3 போ் கைது

வேடசந்தூா் அருகே முதியவரை தாக்கி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 மார்ச், 2026 at 6:39 PM
கைது
பகிர்:

வேடசந்தூா் அருகே முதியவரை தாக்கி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த மண்டபம் புதூரைச் சோ்ந்தவா் சண்முகம் (80). வீட்டில் தனியாக இருந்த இவரை, மா்ம நபா்கள் தாக்கி 5 பவுன் நகையை பறித்துச் சென்றதாக வேடசந்தூா் காவல் நிலையத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன் புகாா் அளிக்கப்பட்டது.

அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் வேடசந்தூா் அடுத்த மேல்மாத்தினிப்பட்டியைச் சோ்ந்த கதிா் (எ) கருப்பசாமி (21), 17 வயதான 2 சிறுவா்கள் உள்ளிட்ட மூவா் இந்த நகைப் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கருப்பசாமி உள்ளிட்ட மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து நகை, கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →