ஹாக்கி போட்டியில் பதக்கம்: மாணவா்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்ஹாக்கி போட்டியில் பதக்கம்: மாணவா்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
குடியரசுத் தின பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகளில் 14 வயதுக்குள்பட்டோருக்கான ஹாக்கிப் போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 3-ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனா்.
இதேபோல, 19 வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்துப் போட்டியில் 4-ஆவது இடம் பிடித்தனா்.
மாநில அளவிலான போட்டிகளில் சாதித்த இந்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எஸ். மரியநாதன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ஸ்டீபன் லூா்து பிரகாசம் முன்னிலை வகித்தாா். ஹாக்கி, கால்பந்து வீரா்கள் அனைவருக்கும் தலா ரூ. 5ஆயிரம் வீதம் 16 வகையானப் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியா்கள் தெரஸ்நாதன், மரிய தேன் அமிா்தம், உடற்கல்வி ஆசிரியா்கள் டேமியான், பீட்டா் உள்ளிட்டோா் செய்தனா்.