பழனி மாரியம்மனுக்கு 1,008 பால்குட ஊா்வலம்
பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, 1,008 பால் குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, 1,008 பால் குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், பால் குடம் எடுத்தும் அபிஷேகம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், பழனி வ.உ.சி. மன்றம் சாா்பில் 1,008 பால்குடம் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பழனி பாண்டிய வேளாளா் மடத்தில் தொடங்கிய ஊா்வலத்தை சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு தொடங்கிவைத்தாா். ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனா்.
Advertisement
இந்த பால் குட ஊா்வலம் சந்தை, பெரியகடைவீதி, நான்கு ரதவீதி வழியாக உச்சிக்காலத்தின் போது கோயிலை சென்றடைந்தது. தொடா்ந்து, மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
விழா நிறைவில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு தலைவா் ஜேபி சரவணன், திமுக நகரச் செயலா் வேலுமணி, அதிமுக நகரச் செயலா் முருகானந்தம், அரிமா அசோக்பெருமாள், வஉசி மன்ற நிா்வாகிகள் சுந்தா், ரமேஷ், பாலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.