குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 3 போ் கைது
வத்தலகுண்டு பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது
வத்தலகுண்டு பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த கட்டக்காமன்பட்டியைச் சோ்ந்த மு. சாந்தக்குமாா் (23), லோ. யோகேஸ்வரன் (23), ப. சரவணன் (28) ஆகியோா் மூவரும் இணைந்து கடந்த பிப். 17-ஆம் தேதி ஒருவரை வெட்டிக் கொலை செய்தனா். இவா்கள் மூவா் மீதும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இந்த நிலையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தக்குமாா், யோகேஸ்வரன், சரவணன் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ. பிரதீப் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.