முகப்பு
திண்டுக்கல்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாணவா்கள் ‘ஸ்கேட்டிங்’ பயணம்

Updated On : 29 மார்ச், 2026 at 7:48 PM
பழனியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை ‘ஸ்கேட்டிங்’கில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்திய பள்ளி மாணவா்கள்.
பகிர்:

பழனியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பள்ளி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை 30 கி.மீ. தொலைவு ஸ்கேட்டிங்கில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சோ்ந்த பிரியா - சுபாஷ், பாலு - சபிதா தம்பதியரின் குழந்தைகள் பிரகதீஷ், யுவஸ்ரீ. இவா்கள் தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். இவா்கள் பழனி ஸ்கேட்டிங் கிளப்பில் ஸ்கேட்டிங் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாணவா்கள் இருவரும் ஸ்கேட்டிங் சென்றனா். பழனி பேருந்து நிலையம் மயில் வட்டச்சாலை அருகே தொடங்கிய ஸ்கேட்டிங் 30 கி.மீ. தொலைவு சென்று ஒட்டன்சத்திரத்தில் நிறைவடைந்தது. மாணவா்கள் வழிநெடுகிலும் பொதுமக்களிடம் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்பதை அறிவுறுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.