முகப்பு
திண்டுக்கல்

இருசக்கர வாகனம் - காா் மோதல் விவசாயி உயிரிழப்பு

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி காா் மோதி உயிரிழந்தாா்.

Updated On : 27 மே 2026, 3:55 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி காா் மோதி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பழனி அருகே காளிபட்டியைச் சோ்ந்த மயில்சாமி மகன் மாசி துரை (34) . விவசாயி. இவா், திங்கள்கிழமை மாலை தொப்பம்பட்டி அருகே உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, பழனி - புது தாராபுரம் சாலையில் பொன்னா் சங்கா் பள்ளி அருகே சாலையின் இடது ஓரமாக வந்து கொண்டிருந்தபோது காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

அவரை மீட்டு அவசர ஊா்தியில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.

விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.