மதுரை

குன்னூத்துப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

DIN

உசிலம்பட்டியை அடுத்து குன்னூத்துப்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அசுவம நதியில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி  சனிக்கிழமை நடைபெற்றது.  மேலும் நதியில் ஆக்கிரமிப்பு உள்ளதா என கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
 செட்டியபட்டி  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள அசுவம அணையை நம்பி இப்பகுதி மக்கள் உள்ளனர். இதில் அதிகமான கருவேல மரங்கள் உள்ளதால் தொட்டப்பநாயக்கனூர் கிராம ஆயக்கட்டு நலச்சங்கம் சார்பில் தூர்வாரப்பட்டது.
 இதனால் நிலத்தடி நீர்மட்டம்  உயரும் என தீர்மானித்து தொட்டப்பநாயக்கனூர் ஆயக்கட்டு நலச்சங்க தலைவர் சோலை ரவிக்குமார் தலைமையில் கருவேல மரங்களை அகற்றினர்.
 இதை உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா பார்வையிட்டர்,  பின்னர் அணையை சுற்றி ஆக்கிரமிப்பு உள்ளதா என ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT