மதுரை

கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

கூட்டுறவு வீட்டு வசதிசங்க உபரிப் பணியாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் மாற்றுப்பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மற்றும் விருதுநகர் மண்டல நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 மதுரையில் வீட்டுவசதி சங்க துணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவர் எம்.ஜி.சத்தியேந்திர நாத் தலைமை வகித்தார். பொதுச் செயலர் ராமச்சந்திரன், மாநிலப் பொதுச் செயலர் எம்.முருகேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மதுரை, விருதுநகர் மண்டலங்களுக்கு உள்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த வீட்டுவசதி சங்க ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.
 தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தள்ளுபடி திட்டங்களால் வீட்டுவசதி சங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.384 கோடி, கடந்த 5 ஆண்டுகளாக வழங்க வேண்டிய சம்பள நிலுவை ஆகியவற்றை உடனடியாக வழங்குவது, அனைத்து சங்கப் பணியாளர்களுக்கும் பாகுபாடின்றி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைள் இதில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

SCROLL FOR NEXT