மதுரை

"ஆன்லைன்' மூலம் மருந்து விற்பனை: தடைகோரி ஆர்ப்பாட்டம்

DIN

மதுரையில் மருந்து மற்றும் அத்தியாவசிய பொருள்களை இணையம் மூலம் விற்பனை செய்ய தடை விதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தில் மருந்து, மளிகை உள்ளிட்ட அத்யாவசிய பொருள்கள் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் முழுமையாக மூடவேண்டும். ஆதார் அட்டை என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கக்கூடாது.
ரேஷன் கடைகளில் அனைத்து பொருள்களும் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மதுரையில் கந்து வட்டி, மீட்டர் வட்டி கேட்டு பெண்கள் மீது அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் பழங்காநத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
 ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் ராஜலட்சுமி, ஏஐடியூசி மாநிலத்தலைவர் நந்தாசிங் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டத் துணைச் செயலர் ஜெயப்பிரியா, நிர்வாகிகள் சுபலட்சுமி, முத்துமணி, ராஜேஸ்வரி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT