மதுரை

விளையாட்டு மைதான கட்டணம் உயர்வு

DIN

மதுரையில் உள்ள டாக்டர்  எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் தனிநபர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான விளையாட்டு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
  மதுரையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் வாடகை அடிப்படையில் தனி நபர்கள், கல்வி நிறுவனங்கள்,  விளையாட்டு அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் மாத, வார மற்றும் நாள் அடிப்படையில் விளையாடவும், தொடர் பயிற்சி பெறவும், போட்டிகள் நடத்தவும் அனுமதி பெற்றுவருகின்றனர்.  இந்நிலையில் இந்த கட்டணம்  உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் முதல்,  தடகளத்துக்காக ஓட்டப்பந்தய பிரிவைப் பயன்படுத்துவோர் மற்றும் உள்விளையாட்டு,  நீச்சல் என அனைத்து விளையாட்டுகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  தடகளம் உள்ளிட்டவற்றுக்கு இரு மடங்குக் கட்டணம் உயர்ந்தப்பட்டுள்ளதாக விளையாட்டு வீரர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT