அனுமார்கோவில் படித்துறை கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க இரும்பு வேலி
மதுரை சிம்மக்கல் அனுமார்கோவில் படித்துறை பகுதியில் கால்வாயில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க இரும்பு வேலி அமைக்க ஆணையர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.
மதுரை சிம்மக்கல் அனுமார்கோவில் படித்துறை பகுதியில் கால்வாயில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க இரும்பு வேலி அமைக்க ஆணையர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.
மதுரை சிம்மக்கல் பகுதியில் மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் புதன்கிழமை காலை ஆய்வை மேற்கொண்டார். அப்போது அவர் சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறை பகுதியில் உள்ள அனுப்பானடி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூய்மைப் பணியைப் பார்வையிட்டார். அப்போது கால்வாயில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவது குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில்
இருபுறமும் இரும்புக் கம்பி வேலி அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மாடிகளில் இருந்து கால்வாயில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்டறிந்து அவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் ஆணையர் உத்தரவிட்டார். திருப்பரங்குன்றம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஆழ்துளைக்கிணறுகள், திருநகர் அண்ணா பூங்கா மேம்பாட்டுப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்த ஆணையர், பூங்காவில் குப்பைகளில் இருந்து உரம் தயாரித்து அதைத் தோட்ட செடிகளுக்கு உரமாக்கவும் உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.