முகப்பு
மதுரை

ஏற்றுமதியை ஊக்குவிக்க இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் தென்தமிழகத்தில் ஏற்றுமதி ஊக்குவிப்பு குறித்த சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் வியாழக்கிழமை (ஏப்.5) நடைபெறுகிறது. 

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:50 am IST
பகிர்:

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் தென்தமிழகத்தில் ஏற்றுமதி ஊக்குவிப்பு குறித்த சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் வியாழக்கிழமை (ஏப்.5) நடைபெறுகிறது. 
அனைத்திந்திய தொழில் வணிக சங்கங்களின் சம்மேளனத்தின் தமிழ்நாடு கிளை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், தமிழக அரசின் எல்காட் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன. 
மதுரைஅழகர்கோவில் சாலையில்  உள்ள  பாண்டியன் விடுதியில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.  இதில் சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டு ஆணையர் எம்.கே.சண்முகசுந்தரம், மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், சிப்காட் மேலாண்மை இயக்குநர் கே.சீனிவாசன், எல்காட் நிறுவன ஆணையர் ஆனந்தராவ் படேல், தமிழக அரசின் தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணைய உதவி செயல் தலைவர் ஷில்பாபிரபாகர்சதீஷ், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக டிரஸ்ட் தலைவர் ஐ.ஜெயகுமார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 
நிகழ்ச்சியில் மதுரை,  மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள்,  முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments