மதுரை

ஏப்.20-இல் உஜ்வாலா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

கிராமப்புற பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வரும் 20-ஆம் தேதி உஜ்வாலா தினம் கொண்டாடப்பட உள்ளது.   
 திருப்பரங்குன்றம் பகுதியில் எரிவாயு  முகவர்களுடன் ஆலோசனை நடத்த வந்த எண்ணெய் நிறுவனங்களுக்கான மண்டல அலுவலர் அஸ்வின் இதுதொடர்பாக திங்கள்கிழமை கூறியது:
 பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் ஏப்.20 ஆம் தேதியை உஜ்வாலா தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற பெண்களுக்கு பாதுகாப்பான, நீடித்த எல்.பி.ஜி பயன்பாட்டிற்கான விழிப்புணர்வை  ஏற்படுத்த உள்ளோம். 
 அன்று நாடு முழுவதும் 15 ஆயிரம் எல்.பி.ஜி. கிராமங்களை தேர்வு செய்து, ஒரு கிராமத்துக்கு குறைந்தபட்சம் 500 பேருக்கு விழிப்புணர்வும், கிராமத்துக்கு புதிதாக 100 எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கும் பதிவு செய்யப்பட உள்ளது. மதுரை மண்டலத்தில் மதுரை கப்பலூர், 
திருமங்கலம், கருமாத்தூர் உள்ளிட்ட 52 கிராமங்களும், விருதுநகர் மாவட்டத்தில் 35 கிராமங்களும், தேனி மாவட்டத்தில் 25 கிராமங்களிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT