முகப்பு
மதுரை

மதுரையில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் அனைத்துத் தேவாலயங்களிலும் திங்கள்கிழமை நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு கூட்டுத் திருப்பலியுடன் நடைபெற்றது.

Updated On : 25 டிசம்பர் 2018, 8:17 am IST
பகிர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் அனைத்துத் தேவாலயங்களிலும் திங்கள்கிழமை நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு கூட்டுத் திருப்பலியுடன் நடைபெற்றது.
  மதுரை கீழவெளி வீதி தூய மரியன்னை ஆலயம், டவுன்ஹால் சாலை புனித ஜெபமாலை அன்னை தேவாலயம், பழங்காநத்தம் புனித அந்தோணியார் ஆலயம், கோ.புதூர் லூர்து அன்னை ஆலயம், நரிமேடு சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலயம்,  பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள பரிசுத்த மீட்பர் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
போலீஸ் பாதுகாப்பு: நள்ளிரவு பிரார்த்தனையில் பங்கேற்கும் கிறிஸ்தவர்களிடம் நகைபறிப்பு, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் விதமாகவும், அசம்பாவிதங்களை தடுக்கவும் மதுரை மாநகரில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், கோரிப்பாளையம், தெற்குவாசல், கீழவாசல், கோ.புதூர், மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் அந்தந்த பகுதி போலீஸார் கண்காணிப்பு, ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments