முகப்பு
செய்திகள்

இராக்கை அபாரமாக வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது செனகல்!

செனகல் அணி அபார வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது குறித்து...

Updated On : 27 ஜூன் 2026, 2:15 pm IST
5 கோல்கள் அடித்த மகிழ்ச்சியில் செனகல் அணியினர். - படம்: ஏபி
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பையில் செனகல் அணி இராக்கை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் செனகல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆப்பிரிக்க சாம்பியனான செனகல் அணி இராக் உடனான ஆட்டத்தில் தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளது.

ஆப்பரிக்க சாம்பியன் விவகாரத்தில் மொராக்கோ என அதன் கூட்டமைப்புக் கூறினாலும் உண்மையாக வென்ற செனகலுக்கு கால்பந்து ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

கனடாவில் நடைபெற்ற இராக் - செனகல் போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கியது. இராக் அணி வீரர் ரெபின் சுலேகாவுக்கு போட்டியின் தொடக்கத்திலேயே (13’) ரெட் கார்டு வழங்கப்பட்டது.

10 பேர்கொண்ட இராக்கை செனகல் பந்தாடியது. 4, 56, 59, 71, 82ஆகிய நிமிஷங்களில் கோல் அடித்தது. இதில் பெப் குயே 2 கோல்கள் அடிக்க, நட்சத்திர வீரர் இஸ்மாயிலா சார் ஒரு கோல் அடித்து அசத்தினார்கள்.

இராக் அணி 1986க்குப் பிறகு ஒரு புள்ளியைக் கூட பெறாமல் வெளியேறியுள்ளது.

summary

Senegal routs 10-man Iraq 5-0 to boost hopes of reaching World Cup knockout rounds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments