முகப்பு
தமிழ்நாடு

காவிரி பழைய பாலம் மூடல்: பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி பழைய பாலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் குறித்து...

Updated On : 27 ஜூன் 2026, 2:16 pm IST
காவிரி பழைய பாலத்தில் பராமரிப்புப் பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி சாலை மறியல் - Video grab
பகிர்:

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி பழைய பாலத்தில் பராமரிப்புப் பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-38) சஞ்சீவி நகா் - திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. திருச்சி - சென்னை வழித்தடம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது, இதனருகே புதிய பாலம் கட்டப்பட்டது.

இதில், பழைய காவிரி பாலத்தில் 2010-இல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தப் பாலத்தில் மீண்டும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தப் பாலம் ஜூன் 25 முதல் தற்காலிகமாக மூடப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பழைய காவிரி பாலம் மூடப்பட்டிருப்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், கால தாமதத்துக்கு வழிவகுப்பதாக அவ்வழியே செல்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே, பாலத்தின் பராமரிப்புப் பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், சஞ்சீவி நகரில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தால் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் நீண்டுள்ளது. ஓயாமரி சாலை தொடங்கி, காவிரி பாலம், மாம்பழச் சாலை, திருவானைக்காவல், கும்பகோணத்தான் சாலை, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வரையில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போராட்டம் நடந்த இடத்துக்கு விரைந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

summary

Residents staged a road blockade protest at Sanjeevi Nagar on the Tiruchirappalli–Chennai National Highway demanding the speedy completion of maintenance work on the Cauvery Bridge.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments