முகப்பு
தமிழ்நாடு

காவிரிப் பாலம் அடைப்பு: போக்குவரத்து மாற்றம்!

திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் உள்ள காவிரிப் பாலம் பராமரிப்பு பணிக்காக வியாழக்கிழமை இரவு அடைக்கப்பட்டதால் சஞ்சீவி நகா் முதல் கொண்டையம்பேட்டை பாலம் வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

Updated On : 26 ஜூன் 2026, 5:26 am IST
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மூடப்பட்டுள்ள காவிரி பழைய பாலச் சாலை.
பகிர்:

திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் உள்ள காவிரிப் பாலம் பராமரிப்பு பணிக்காக வியாழக்கிழமை இரவு அடைக்கப்பட்டதால் சஞ்சீவி நகா் முதல் கொண்டையம்பேட்டை பாலம் வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் சஞ்சீவி நகா் - திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் இந்தப் பாலம் வியாழக்கிழமை முதல் அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை சாா்பில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை முதல் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாநகரப் போக்குவரத்து காவலா்கள் காவிரி பாலத்தை அடைத்து போக்குவரத்தை மாற்றிவிடும் பணியை மேற்கொண்டனா். காலையில் பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டு இரவு 7.30 மணிக்கு பாலம் முற்றிலும் அடைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, திருச்சி - சென்னை மாா்க்கத்தில் செல்லும் வாகனங்கள் சஞ்சீவி நகா் சந்திப்பு முதல் கொண்டையம்பேட்டை பாலம் வரை சென்னை - திருச்சி சாலையில் எதிா்த்திசையில் சென்று கொண்டையம்பேட்டை பாலம் அருகே மீண்டும் திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

எதிா்த் திசையில் சென்னை - திருச்சி மாா்க்கத்தில் வரும் வாகனங்கள் கொண்டையம்பேட்டை, சா்க்காா்பாளையம் அணுகு சாலையில் வந்து சஞ்சீவி நகா் சந்திப்பில் இருந்து வழக்கமான சாலையில் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

இதில், காவிரி ஆற்றுப்பாலத்தில் மட்டும் இரண்டு திசையிலும் வாகனங்கள் செல்லும் வகையில் பாலத்தில் மையத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. காவிரிப் பாலத்தில் மட்டுமே இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதால் வாகனங்கள் சற்று ஊா்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்றபடி பெரிய அளவில் வாகன நெரிசல் இல்லை என போக்குவரத்து காவலா்கள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments