மதுரை

வேலை வாங்கித் தருவதாக ரூ.90 ஆயிரம் மோசடி: 3 பேர் கைது

DIN

மதுரையைச் சேர்ந்த இளைஞரிடம் வேலை வாங்கித்தருவதாக கட்செவி அஞ்சல் குழு மூலம் ஏமாற்றி ரூ.90 ஆயிரம் மோசடி செய்த 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மதுரை பந்தடி 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி விஷ்ணுகுமார் (23). வேலை தேடி வந்த இவர், வேலைவாய்ப்புத் தொடர்பான கட்செவி அஞ்சல் குழுவில் இணைந்துள்ளார். இந்நிலையில் வேலை தொடர்பாக வந்த பதிவை பார்த்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பேசியவர்கள் ரூ.90 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் செலுத்தினால் பணி நியமன ஆணையை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விஷ்ணுகுமார் ரூ.90 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் செலுத்தியதை அடுத்து, பணி நியமன ஆணையை அனுப்பி வைத்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனத்துக்கு விஷ்ணுகுமார் சென்றபோது, அந்நிறுவனம் போலியானது என்று தெரியவந்தது.
இதுதொடர்பாக விஷ்ணுகுமார் அளித்தப் புகாரின்பேரில் 
சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில், விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த  அம்பேத்ராஜ்குமார்(29), வெங்கடேஷ் (29),  வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சுஜித் (29) ஆகிய மூவரும் சேர்ந்து வேலை தேடும் இளைஞர்களை, வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி மோசடி செய்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம், மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT