முன்னாள் எஸ்.பி. காரில் செல்லிடப்பேசி, கடவுச்சீட்டு திருட்டு
மதுரையில் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் காரில் இருந்து விலை உயர்ந்த செல்லிடப்பேசிகளை அடையாளம் தெரியா
மதுரையில் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் காரில் இருந்து விலை உயர்ந்த செல்லிடப்பேசிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை பொன்மேனி ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சென்ராயப்பெருமாள் (73). காவல்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சென்றாயப் பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று விட்டு காரில் மதுரைக்கு வந்துள்ளார். வீட்டுக்குச் செல்லும் வழியில் பைபாஸ் சாலையில் உள்ள உணவகம் முன்பாக காரை நிறுத்தி விட்டு உணவகத்துக்குள் சென்றார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த 2 "ஐ போன்கள்', செல்லிடப்பேசி மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக சென்றாயப்பெருமாள் அளித்தப் புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.