மதுரை

உசிலை, மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும்  மன்றக் கூட்டங்கள்

DIN

உசிலம்பட்டியில் மார்ச் 20 ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை), மதுரை மாநகரில் மார்ச் 22 ஆம் தேதியும் (வியாழக்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
     இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மதுரை மின்பகிர்மானக் கழக மேற்பார்வைப் பொறியாளர் ஜா. பிரீடாபத்மினி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 
உசிலம்பட்டி கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், உசிலம்பட்டி மின்வாரியச் செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில், உசிலம்பட்டி மின்வாரியக் கோட்ட நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரிலோ, மனுக்கள் மூலமோ மேற்பார்வைப் பொறியாளரிடம் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     மதுரை மின்விநியோகம் மற்றும் மெட்ரோ வட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத் தலைவர் பி. பாஸ்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 
மதுரையில் கோ.புதூரில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் குறைதீர்க்கும் மன்றக் கூட்டம் நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் கூட்டத்தில், மதுரை பெருநகர் மேற்பார்வைப் பொறியாளர் கலந்துகொள்கிறார். 
    இதில், சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், யானைக்கல், தமிழ்ச்சங்கம், டவுன்ஹால் சாலை, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், மாகாளிபட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம் பிள்ளையார் கோயில், தெப்பக்குளம், முனிச்சாலை, அனுப்பானடி, சிந்தாமணி, கீழவாசல், தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆத்திகுளம், ஆனையூர், கோ.புதூர், கே.கே.நகர், அண்ணாநகர், மேலமடை, அரசரடி, விளாங்குடி, பிபிசாவடி, ஞானஒளிவுபுரம், பழங்காநத்தம், எஸ்.எஸ்.காலனி, பசுமலை, திருப்பரங்குன்றம், டி.வி.எஸ்.நகர், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், வில்லாபுரம், அவனியாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் பங்கேற்று தங்களது குறைகளை நேரிலோ அல்லது மனு வாயிலாகவோ தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT