முகப்பு
மதுரை

நல்லதங்காள் ஊருணியை சுத்தப்படுத்திய  மக்கள் நீதி மையம் கட்சியினர்

அவனியாபுரம் நல்லதங்காள் ஊருணியை மாநகராட்சி ஊழியர்களுடன் மக்கள் நீதி மையம் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சுத்தப்படுத்தினர். 

Updated On : 5 நவம்பர் 2018, 8:02 am IST
பகிர்:

அவனியாபுரம் நல்லதங்காள் ஊருணியை மாநகராட்சி ஊழியர்களுடன் மக்கள் நீதி மையம் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சுத்தப்படுத்தினர். 
அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் நல்லதங்காள் ஊருணி உள்ளது. இந்த ஊருணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் படுத்தப்படாமல், குப்பைகளால் மாசடைந்து சுற்றுப்புற சுகாதாரமின்றி இருந்தது. இதனால் துர்நாற்றம் அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்தது. 
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் மாநகராட்சியினரிடம் ஊருணியை சுத்தப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியினர், மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் சுமார் 3 டன் அளவிலான குப்பைகள் ஊருணியிலிருந்து அகற்றப்பட்டன. 
தூய்மைப் பணியில் மக்கள் நீதி மையம் கட்சி மேற்கு மாவட்ட செயலர் மணி, நிர்வாகிகள் 
கிருஷ்ணகுமார், சரவணன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments