மதுரை

கிரானைட் வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு

DIN


மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி பதுக்கி வைக்கப்பட்ட  கிரானைட் முறைகேடுகள் தொடர்பான 38 வழக்குகள் மீதான விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி பதுக்கிவைக்கப்பட்டது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் தொடந்த 26 வழக்குகள், கிரானைட் முறைகேடு தொடர்பாக போலீஸார் தொடர்ந்த 12 குற்ற வழக்குகளும் மேலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பு சாட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மேலூர் நீதித்துறை நடுவர் பழனிவேலு உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT