மதுரை

ஏடிஎம் இயந்திரத்தை திருடும் முயற்சி தோல்வி: பல லட்சம் ரூபாய் தப்பியது

DIN

மதுரையில் சனிக்கிழமை மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து எடுத்துச் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் பல லட்சம் ரூபாய் தப்பியது.
மதுரை விளாங்குடி பகுதியில் மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்திற்கு சனிக்கிழமை வாடிக்கையாளர்கள் வந்தபோது ஏடிஎம் இயந்திரம் அதன் இடத்தில் இருந்து உடைக்கப்பட்டு நகர்த்தப்பட்டிருந்தது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் வங்கிக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். 
இது குறித்து ஏடிஎம் இயந்திரம் தயாரிக்கும் மற்றும் பராமரிக்கும் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் கோபிசுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில்  செல்லூர் போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சனிக்கிழமை அதிகாலையில் ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளதாகவும், பல மணி நேரம் போராடியும் உடைக்க முடியாததால், அந்த நபர்கள் திருட்டு முயற்சியைக் கைவிட்டு சென்றதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT