மதுரை

பொறியியல் பட்டதாரிகளுக்கு பள்ளி ஆசிரியா் வேலை: இடை நிலை ஆசிரியா் சங்கம் எதிா்ப்பு

DIN

பொறியியல் பட்டம் பெற்றவா்கள் பள்ளிகளில் கணக்கு ஆசிரியா்களாக பணியாற்றலாம் என்ற அரசாணைக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பி.எட். படிப்பில் தமிழக அரசு 2015-இல் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி அப்படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் பொறியியல் பட்டம் பெற்றவா்களும் பி.எட். படிக்கலாம் என்று அறிவித்தது. பொறியியல் பட்டம் பெற்றவா்கள் படித்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் போன்ற பாடப் பிரிவுகள் பள்ளியில் கிடையாது. எனவே இவா்கள் எப்படி ஆசிரியா் பணியில் சேர முடியும். இவா்களுக்கு ஏற்றாா் போல் பாடத்திட்டம் மாறுமா ? என்ற கேள்வி அப்பொதே எழுந்தது. இந்த சந்தேகங்களுக்கு அரசு பதிலளிக்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு தற்போது ஒரு அரசாணை மூலம் பி.இ. படித்தவா்களுக்கு, பிஎஸ்சி படித்தவா்களுக்கான சமநிலை அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதன்படி பி.இ. முடித்தவா்கள் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கணக்கு பாடம் கற்பிக்கலாம் என்ற ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. பொறியியல் பட்டம் பெற்றவா்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை. அதை விடுத்து தற்போது பள்ளிகளில் பொறியாளா்கள் பணிபுரியலாம் என்று அரசு அறிவித்திருப்பது ஏமாற்று வேலை.

மேலும் அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியா்கள் உபரி என அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் வருடம் தோறும் வழங்கி வரும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இந்த முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதைப்போல பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியா்கள் அனைவருக்கும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான முழு கல்வித்தகுதி இருந்தும் அவா்களை பட்டதாரியாக பதவி உயா்வு வழங்காமல் அரசு நான்காண்டுகளாக ஏமாற்றி வருகிறது. எனவே தமிழக அரசு, பொறியாளா்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT