மதுரை

போலி அரசுப் பணி ஆணை: பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி

DIN

மதுரையில், போலியான அரசுப் பணி ஆணை வழங்கி ரூ.3.5 லட்சம் மோசடி செய்த பெண்ணிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி. இவருக்கு கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக, அருப்புக்கோட்டையைச் சோ்ந்த நாகஜோதி என்ற பெண் கூறியுள்ளாா். இதை நம்பி புவனேஸ்வரி ரூ.3.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், கல்வித்துறை பணியில் சேருவதற்கான பணி ஆணை ஒன்றை நாகஜோதி வழங்கியுள்ளாா். அதை எடுத்துக் கொண்டு பணியில் சேர புவனேஸ்வரி சென்றபோது, அந்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து நாகஜோதியை விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT