முகப்பு
மதுரை

மதுரையில் இன்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  நிதியளிப்புக் கூட்டம் சீதாராம் யெச்சூரி பங்கேற்பு

மதுரையில் புதன்கிழமை நடைபெறும் நிதியளிப்புக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பங்கேற்கிறார்.

Updated On : 23 ஜனவரி 2019, 7:32 am IST
பகிர்:

மதுரையில் புதன்கிழமை நடைபெறும் நிதியளிப்புக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பங்கேற்கிறார்.
புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுர்ஜித் பவன் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக்குழு சார்பில் நிதியளிப்புக்கூட்டமும், அண்மையில் உயிரிழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் செயலர் இரா.ஜோதிராம் படத்திறப்பு மற்றும் குடும்ப நிதியளிப்பு நிகழ்ச்சியும் புதன்கிழமை நடைபெறுகிறது. மதுரை பசுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி பங்கேற்கிறார். இதில் மாநிலச்செயலர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு, மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள், மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.