மதுரை

ஆசிரியர் தகுதித் தேர்வு மதுரையில் 19 மையங்களில் 6,457 பேர் எழுதினர்

DIN


மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 19 மையங்களில் 6,457 பேர் எழுதினர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், இடைநிலை ஆசிரியர் (தாள்-1) மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கான (தாள்-2) தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இத்தேர்வுக்காக, மதுரை மாவட்டத்தில் 19 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பங்கேற்க மொத்தம் 7,378 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 6,457 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 921 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தேர்வையொட்டி, கல்வித் துறை அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு அறைகளில் முறைகேடுகளைத் தடுக்க 100 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்துக்கான தகுதித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக, மதுரை மாவட்டத்தில் 40 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தேர்வுக்கு 15,992 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT