மதுரை

கூடலழகர் கோயிலில் திருக்கல்யாணம்

மதுரை கூடலழகர் கோயிலில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம் வியாழக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

DIN

மதுரை கூடலழகர் கோயிலில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம் வியாழக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
 கடந்த 15-ஆம் தேதி பங்குனி உத்திர விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள மதுரவல்லித்தாயார் சன்னதியில் சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீமதுரவல்லி, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைத்திட, பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.   இதே போன்று பிரசித்தி பெற்ற மதுரை, தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கியது. திருவிளக்கு பூஜை, பால்குடம்  அபிஷேகம், உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி பூப்பல்லக்கு வியாழக்கிழமை விமர்சையாக நடைபெற்றது. சுவாமி பூப்பல்லக்கில் நான்கு மாசி வீதிகளில் உலா வந்தார். இந்த வீதி உலாவின் போது பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT