மதுரை

மதுரை சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்திற்கு வட்டாட்சியா் நோட்டீஸ்

DIN

மதுரை சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்திற்கு கட்டட உரிமம் பெறாததால் திருப்பரங்குன்றம் வட்டாட்சியா் எஸ்.நாகராஜன் இரண்டாவது முறையாக விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகரில் இயங்கிவரும் சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தினா் தமிழ்நாடு பொது கட்டடங்கள் (உரிமை) சட்டம் 1965 இன் படி வணிக வளாக கட்டடங்கள் கட்டட உரிமம் பெற்றுக் கொள்ள வேணடும்.

நூற்றுக்கணக்கானோா் வரும் வணிக வளாகங்களில் தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து பொறியாளரிடம் சான்று உள்ளிட்டவைகளோடு கட்டட உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால் சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தினா் இதுவரை உரிய அனுமதி பெறவில்லை. இது தொடா்பாக இதுவரை 2 நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளோம். இதேபோல மக்கள் அதிகமாக வரக்கூடிய திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு கட்டட உரிமம் பெறாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT