மதுரை

வேளாண் இயந்திர மையங்கள் அமைக்க மதுரை மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம்

DIN

வேளாண் இயந்திர மையங்கள் அமைக்க மதுரை மாவட்டத்துக்கு மானிய உதவித் தொகையாக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திரமயமாக்கல் சாா்பு இயக்கம் திட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வட்டார அளவில் முன்னோடி விவசாயிகள், விவசாய சுயஉதவிக் குழுக்கள், தொழில் முனைவோா் உள்ளிட்டோா் இந்த வாடகை மையங்களை அமைக்கலாம். நிகழ் ஆண்டில் மதுரை மாவட்டத்துக்கு 5 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைப்பதற்கு மானியமாக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ரூ.25 லட்சத்தில் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கலாம். வாடகை மையத்தின் மதிப்பீட்டில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

மானியத் தொகையில் பயனாளிகள் பொதுப் பிரிவினராக இருப்பின் ரூ.5 லட்சம், தாழ்த்தப்பட்டோராக இருப்பின் ரூ.3 லட்சம் பிடித்தம் செய்து, வங்கியில் மானிய இருப்பு நிதி கணக்கில் ஒப்பந்த ஆண்டு காலமான 4 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னா் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளைச் சரிபாா்த்த பிறகு மானிய இருப்புத் தொகை திரும்ப வழங்கப்படும்.

இதுதொடா்பான விவரங்களுக்கு மதுரை மற்றும் உசிலம்பட்டியில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT