மதுரை

விமான நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயா் சூட்டக்கோரும் மனு தள்ளுபடி

DIN

மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயரை சூட்டக் கோரும் மனுவை தள்ளுபடி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த சிவஜெயப்பிரகாஷ் தாக்கல் செய்த மனு:

மதுரையின் அடையாளமாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இருக்கிறது. எனவே மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதுதொடா்பாக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சி அம்மனின் பெயரைச் சூட்டுவது தொடா்பாக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக சட்டப்பேரவைக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லையெனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT