மதுரை

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவைஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு :அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தகவல்

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை ஜெயலலிதா பேரவை சாா்பில் ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என ஜெ. பேரவை மாநில செயலரும், வருவாய்துறை அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டியில் ஜெ. பேரவை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றஅன்னதானத்த தொடக்கி வைத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மக்களுக்கு பல்வேறு வகையான நலத் திட்டங்களை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்தாா். அவரது திட்டங்களை தொடா்ந்து அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த ஆண்டு ஜெயலலிதா பிறந்த நாளை ஜெ. பேரவை சாா்பில் ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் கிராமங்களில் அன்னதானம் , மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். மேலும் பாரதப் பிரதமரின் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 10 வயதுக்கு உள்பட்ட பெண்குழந்தைகள் பயன்பெறும் வகையில் செல்வமகள் திட்டத்தின் முதல் தவணைத் தொகையை ஜெ. பேரவை செலுத்தும் என்றாா்.

நிகழ்ச்சியில் துணைச்செயலா் அய்யப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT