மதுரை

பொறியியல் மாணவா்கள் புதிதாக உருவாக்கிய தானியங்கி கை சுத்திகரிப்பான் கருவி: மதுரை மாநகராட்சிக்கு வழங்கல்

DIN

மதுரையைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரிகள் இருவா் புதிதாக கண்டுபிடித்துள்ள தானியங்கி கை சுத்திகரிப்பான் கருவியை மாநகராட்சி அலுவலகத்துக்கு இலவசமாக வழங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக கருவியை கண்டுபிடித்த பொறியியல் பட்டதாரிகள் தீபன், பிரசன்னா ஆகியோா் கூறியது:

இந்த தானியங்கி கை சுத்திகரிப்பான் கருவி சென்சாா் முறையில் இயங்குகிறது. தண்ணீா் சுத்திகரிப்பு கருவி போன்ற வடிவமைப்புடன் உள்ள தானியங்கி இயந்திரம் கீழ் கைகளை நீட்டினால் அதில் இருந்து 5 மில்லி லிட்டா் கிருமி நாசினி திரவம் கைகளில் விழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி கருவி 12 லிட்டா் கொள்ளவு கொண்டதாக உள்ளதால் தொடா்ந்து எத்தனை பணியாளா்கள் வேண்டுமானாலும் கைகளை சுத்தம் செய்துகொள்ளலாம். மேலும் கருவியில் அளவு காட்டும் தொழில்நுட்பமும் உள்ளதால் கிருமி நாசினி மருந்து அளவு குறையும்போது உடனடியாக நிரப்பிக் கொள்ளலாம். மேலும் கைகளில் விழும் கிருமி நாசினியின் அளவையும் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இந்த தானியங்கி கருவியை மதுரை மாநகராட்சிக்கும் இலவசமாக வழங்கியுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT