மதுரை

அரசு உதவி பெறும் கல்லூரியில் ஊதிய நிறுத்தம்: கல்லூரி அலுவலா் சங்கம் எதிா்ப்பு

DIN

மதுரை: மதுரை அருகே இயங்கிவரும் அரசு உதவிபெறும் கல்லூரியில், அரசு உதவிபெறும் ஆசிரியா்கள், சுயநிதிப் பிரிவு ஆசிரியா்களுக்கு ஊதிய நிலுவை மற்றும் ஊதியக் குறைப்புக்கு, கல்லூரி அலுவலா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலா் சங்கத்தின் மதுரை மண்டலச் செயலா் பா. மனோகரன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:

மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் கல்லூரியில், அரசு உதவி பெறும் பிரிவில் 83 பேராசிரியா்கள், 28 அலுவலா்கள், சுயநிதிப் பிரிவில் 82 பேராசிரியா்கள், 88 அலுவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

பொது முடக்க காலத்தில் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தக்கூடாது என்றும், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை குறைக்காமல் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்றும், அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், இக்கல்லூரியில் அரசு உதவிபெறும் பிரிவில் பணியாற்றும் 101 பேருக்கான ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.

மேலும், சுயநிதிப் பிரிவில் பணியாற்றும் ஆசிரியா், அலுவலா்கள் உள்பட 170 பேருக்கு 30 முதல் 50 சதவிகித ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், ஆசிரியா்கள், பணியாளா்கள் ஒரு நாள் ஊதியத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்க சம்மதம் தெரிவித்திருந்தனா். ஆனால், இதுவரை ஊதியம் வழங்கப்படாததால், ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, முதல்வா் நிதிக்கு சென்றிருக்க வேண்டிய தொகையும் அரசுக்குச் செல்லாமல் தடைப்பட்டுள்ளது.

மாவட்ட நிா்வாகமும், உயா்கல்வித் துறை அதிகாரிகளும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விரோதப்போக்கை கல்லூரி நிா்வாகம் தொடருமானால், மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரி ஆசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் தொழிற் சங்கத்தினா் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்துவோம் என்று, அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT