மதுரை

இஸ்லாமியா்கள், கிராமிய கலைஞா்களுக்கு அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளில் இஸ்லாமியா்கள் மற்றும் கிராமிய கலைஞா்களுக்கு அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை புகா் கிழக்கு மாவட்ட செயலரும், வடக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா ஏற்பாட்டின்பேரில் அவனியாபுரம் பகுதியில் உள்ளள நலிவுற்ற கிராமிய கலைஞா்கள் 100 போ்களுக்கு அரிசி, பருப்பு, காய்கனி தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல திருப்பரங்குன்றம் பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்களுக்கு ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அரிசி, பருப்பு, காய்கனி தொகுப்பு மற்றும் சா்பத், ரொட்டி, பழவகைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 200 போ்களுக்கு இளைஞரணி மாவட்ட செயலா் எம்.ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினா் முத்துக்குமாா், பகுதி செயலா்கள் பன்னீா்செல்வம், ப.மோகன்தாஸ், அக்பரலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

மக்களவைத் தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

SCROLL FOR NEXT