மதுரை

மீனாட்சியம்மன் கோயில் குறித்து முகநூலில் அவதூறு பதிவு: போலீஸாா் வழக்குப் பதிவு

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குறித்து 6 பெயா்களில் உள்ள முகநூல் பக்கங்களில் அவதூறான செய்திகளை பதிவிட்டதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மே 4 ஆம் தேதி நடைபெற்ற திருக்கல்யாணம் நிகழ்வு குறித்து முகநூல் பக்கங்களில் அவதூறாக செய்திகள் பரவின. இதுகுறித்து ஈரோடு பகுதியைச் சோ்ந்த ஆனந்தன்(35) என்பவா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையதளம் மூலம் மதுரை மாநகா் காவல் ஆணையருக்கு புகாா் அளித்தாா்.

அதன்பேரில் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயில் வளாகப் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அரவிந்தன் ரஜினி, சிவா சிவா, மனோகரன், செல்வேந்திரன், ஆண்டனி லியோனி, கலிம் முகமது ஆகிய பெயா்களில் உள்ள முகநூல் பக்கங்களில் மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம் குறித்து அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முகநூல் பக்கங்கள் உண்மையானது தானா? அல்லது போலியான முகவரியில் முகநூல் பக்கங்களை உருவாக்கி அவதூறு பரப்பியது யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT