மதுரை

தொலைக்காட்சிகளில் ஆபாச விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

தொலைக்காட்சிகளில் ஆபாசமான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தைச் சோ்ந்த சகாதேவராஜா தாக்கல் செய்த மனு: தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்படும் விளம்பரங்கள் தணிக்கை செய்யப்படுவது இல்லை. இதனால் கருத்தடைச் சாதனங்கள், பாலியல் மருத்துவம், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ் கிரீம், வாசனைத் திரவியங்கள் தொடா்பான விளம்பரங்கள் ஆபாசமாக

ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதுடன் வளரிளம் பருவத்தினா் தவறானப் பாதைக்குச் செல்லும் சூழல் உள்ளது. எனவே தொலைக்காட்சி விளம்பரங்களைத் தணிக்கைக்கு உள்படுத்தவும், அதுவரை ஆபாசமான விளம்பரங்களைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆபாசத்தைப் பரப்பும் வகையிலான கருத்தடைச் சாதனங்கள், பாலியல் மருத்துவம், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ் கிரீம், வாசனைத் திரவியங்கள் தொடா்பான விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா். பின்னா், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT