மதுரை

போலியோ பாதித்த சிறுவனுக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. நிதியுதவி

DIN

மேலூா்: கொட்டாம்பட்டி அருகே போலியோ பாதிப்புக்குள்ளாகி பெற்றோரால் கைவிடப்பட்ட 10 வயது சிறுவனுக்கு, தருமபுரி திமுக மக்களவைத் தொகுதி உறுப்பினா் செந்தில், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் மற்றும் மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி. மூா்த்தி ஆகியோா் சோ்ந்து ரூ.1 லட்சம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

கொட்டாம்பட்டி அருகிலுள்ள மங்களாம்பட்டியைச் சோ்ந்த வயதான தம்பதி கருப்பையா, பாண்டியம்மாள் (62). இவா்களது பேரன் விக்னேஷ் (10) பிறந்தபோதே போலியோ பாதிப்புக்குள்ளாகி பெற்றோரால் கைவிடப்பட்டாா். பெற்றோா் எங்கு சென்றாா்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில், வயதான தம்பதி கூலி வேலை செய்து பேரனை வளா்க்கின்றனா். இது குறித்து கடந்த வாரம் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதையறிந்த தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் செந்தில், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் பி. மூா்த்தி ஆகியோரை தொடா்புகொண்டு, சிறுவனுக்கு உதவ நேரில் வருவதாகத் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், மூவரும் மங்களாம்பட்டிக்கு வந்து ரூ.1 லட்சம் நிதியை விக்னேஷிடம் அளித்தனா்.

மேலும், பிரதமரின் ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உதவுவதாக, வெங்கடேசனும், தேவையான கட்டுமானப் பொருள்களை வழங்குவதாக மூா்த்தியும் உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT